பிரேசிலா:
பிரேசில் நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் சுற்றுலா பயணிகள் 14 பேர் உயிரிழந்தனர்.
பிரேசிலின் அமேசான் மாகாணம் மனஸ் பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் 14 பேருடன் சிறிய ரக விமானம் பார்சிலோஸ் நோக்கி புறப்பட்டது.
கனமழை பெய்துகொண்டிருந்த நிலையில் விமானம் பார்சிலோசில் தரையிறங்கியபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து அந்த விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த சுற்றுலா பயணிகள் 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.