சபா, சரவாக்கில் நெற்செய்க்கை; 50,000 ஹெக்டேர் அடையாளம் காணப்பட்டது என்கிறார் ஜாஹிட்

செபுயாவ்:

பா மற்றும் சரவாக்கில் நெல் நடவு செய்வதற்கு 50,000 ஹெக்டேர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறுகிறார்.

இந்த விஷயத்தை முதல்வர் டான் ஸ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஓபங் கொள்கையளவில் ஒப்புக்கொண்டார், இருப்பினும் அதை செயல்படுத்த சிறிது காலம் தேவைப்படும் என்று துணைப் பிரதமர் கூறினார்.

கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்படும் ஒதுக்கீடு, சரவாக் வேளாண்மை அமைச்சகத்தின் நவீனமயமாக்கலுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றார.

மேலும் “சபா மற்றும் சரவாக்கில் உள்ள நிலத்தின் தன்மைக்கேற்ப நடப்படும் நெற்பயிர் வகை இருக்கும்” என்றும் அவர் கூறினார்.

கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சராகவும் இருக்கும் அஹ்மத் ஜாஹிட் தொடர்ந்து கூறுகையில், கிராமப்புற மற்றும் உள்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எந்தவொரு வளர்ச்சித் திட்டத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், குறிப்பாக சரவாக்கில் கிராமப்புற மக்கள் தொகை சுமார் 1.4 மில்லியன் ஆகும்.

“சரவாக் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆவதால், கிராமம் மற்றும் உள்பகுதிகளை மேம்படுத்துவது மத்திய, மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்பாகும்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here