திங்குற ரொட்டித் துண்டுல ரத்தச் சுவை தான் இருக்கு’: நிவாரண முகாம்களில் கொல்லப்படும் காசா மக்களின் கடைசி அழுகுரல்!!

காசா:

திங்குற ரொட்டித் துண்டுல ரத்தச் சுவை தான் இருக்கு என நிவாரண முகாம்களில் கொல்லப்படும் காசா காசா மக்களின் கடைசி அழுகுரல். நேற்று நிவாரண முகாம்களில் உணவுகாக்கவும், உடைக்காகவும் நிர்கதியாக நின்று கொண்டிருந்த 56 மக்களை சுட்டு வீழ்த்தி இருக்கிறது இஸ்ரேல் ராணுவம். ரஃபா பகுதியில் மட்டும் 27 நபர்கள் துப்பாக்கி முனையில் வீழ்த்தப்பட்டு இருக்கிறார்கள். உணவு முகாம்களில் இல்லாமல் வேறு இடங்களில் கொல்லப்படுபவர்களின் பட்டியல் தனி. இப்படியாக காசாவின் மனிதநேய அமைப்பின் நிவாரண மையங்களில் இதுவரை கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 400ஐ கடந்திருக்கிறது.

நாள்தோறும் பசி, பட்டினியால் மரணித்து கொண்டு இருப்பவர்களுக்கு எளிதாக மரணத்தை நிறைவேற்றி கொண்டிருக்கிறது இஸ்ரேல் அரசு. நிவாரண முகாம்களையும் மரண படுக்கைகளாக மாற்றி கண்டு இருக்கிறது இஸ்ரேல். ஒரு வாய் சோத்துக்கு தான் இங்கு வரோம். இது மிக மோசமான உலகம். நீதி, நேர்மை என்னும் ஏதும் இல்லாத உலகம். மொத்த உலகமும் எங்களை கைவிட்டு விட்டது. டஜன் கணக்கில் எங்களை கொன்று கொண்டு இருக்கிறார்கள். ஒரு ரொட்டி துண்டுக்கு உசுர கொடுத்து கொண்டு இருக்கிறோம் என காசா மக்கள் விரக்தியின் உச்சத்தை பேசுகின்றனர். இந்த இடத்தில் தான் நிவாரண பொருள் வழங்கப்படுகிறது என்ற செய்தி பரப்பப்படுகிறது. நிவாரண பொருட்களை வாங்க செல்லும் பலர் வீடுகளுக்கு திரும்புவதே இல்லை. தன்னுடைய வீட்டில் உள்ளவர்களுக்காக உணவு வாங்க செல்லபவர்கள் “இந்த உணவில் ரத்த சுவை உண்டு” என்கிறார்கள்.

சர்வதேச ஊடகத்திற்கு காசா மக்கள் சிலர் கூறியதாவது; நிவாரண டிரக்குகளை நோக்கி செல்பவர்களை இஸ்ரேல் ராணுவம் முதலில் சுட்டு வீழ்த்துகிறார்கள். ராணுவம் நோக்கி வந்ததால் சுட்டோம் என தரப்பு நியாயமாக ஒன்றை இஸ்ரேல் சொல்கிறது.போர்ச் சூழலில் எந்த தேசத்திடம் எவ்வளவு அணு ஆயுதங்கள் இருக்கின்றன என கிரிக்கெட் கார்டு விளையாட்டு போல் பார்ப்பது எல்லாம் ஜாலியாகத்தான் இருக்கும். ஆனால், உண்ண உணவின்றி , அடுத்த நொடி நிச்சயமற்ற சூழல் உருவாகும் போதுதான் போர் எவ்வளவு ஆபத்தான உயிரினம் என்பது புரியும். போர் அழிவை உண்டு வாழும். காஸா மக்கள் நிம்மதியாய் உணவு உண்ணும் நாளுக்காக காத்திருப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here