ஸ்ரீ இஸ்கண்டார்,
நாட்டின் புகழ்பெற்ற உயர்கல்விக் கூடங்களுள் ஒன்றான பெட்ரோனாஸ் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் (UTP), பிலிப்பைன்சின் அறிவியல், தொழில்நுட்பத்துறை பிராந்திய அலுவலகம் (DOST-XI) ஆகிய இருதரப்பும் அண்மையில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்து அதன் ஆய்வு, புத்தாக்க, வணிகமயப் பிரிவு துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் முகமட் ஷஹிரும் DOST-XI தரப்பைப் பிரதி நிதித்து அதன் பிராந்திய இயக்குநர் டாக்டர் அந்தோணி சியும் இந்த உடன்படிக்கை யில் கையெழுத்திட்டனர்.
குறிப்பாக மலேசியாவிலுள்ள பிலிப்பைன்ஸ் தூதரகத்தின் 3ஆம் கட்ட செயலாளரும் துணை தூதருமான காரா டெனிஸ் முன்னிலையில் இந்த உடன்படிக்கை கையெழுத் தானது.குறிப்பாக கல்வி – தொழில்துறை – அரசாங்கத்திற்கு இடையிலான ஒத்து ழைப்பை வளர்ப்பதோடு புதுமை அம்சங்களைத் துரிதப்படுத்தவும் தொழில் நுட்ப புத்தாக்கங்களை விரிவுபடுத்துவதோடு பிலிப்பைன்ஸ் தயாரிப்புகளுக்கான உல களாவிய விநியோகத் தேவைகளை அதிகரிப்பதும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத் தின் முக்கிய அம்சங்களாகும்.
இது தவிர பல்கலைக் கழகப் பயிற்சித் திட்டங்கள் பிராந்திய நிலையிலான வளர்ச் சிக்கும் பங்களிப்பதை உறுதிசெய்ய இருதரப்பு இடையிலான பயிற்சித் திட்டங்களும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழி முன்னெடுக்கப்படுகின்றன. தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தின் வழி கூட்டு வர்த்தக வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் ஊக்குவிக் கப்படுகின்றன. இதன்மூலம் பொருளாதார நல்லுறவுகளும் வலுப்படுத்தப்படும்.
இதனிடையே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமானது பெட்ரோனாஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பயணத்தில் ஒரு வரலாற்று மைல்கல்லாக அமைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.