எதிர்க்கட்சி MPக்களுக்கான ஒதுக்கீடுகள் பற்றி ஹம்சாவிடம் கேளுங்கள் – சைட் சாடிக்கிற்கு ஃபஹ்மி பதிலடி

 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரும்  ஒதுக்கீட்டை இன்னும் ஏன் பெறவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீனை மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் கேட்க வேண்டும் என்று ஃபஹ்மி ஃபட்சில் கூறுகிறார். அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில் துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோப் ஏற்கனவே எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தங்களுக்குத் தேவையான ஒதுக்கீடுகளின் அளவு குறித்த ஆலோசனைகளை முன்வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

செய்தித் தகவல்களின்படி, ஒதுக்கீடு விஷயங்களில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு ஃபடில்லா கேட்டுக் கொண்டார். செயல்முறை ஏற்கெனவே உள்ளது. எனவே முதலில் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுனம். ஆனால் எதிர்க்கட்சிகள் இன்று வரை தனது ஆலோசனைகளை (அரசாங்கத்திற்கு) வழங்கவில்லை என்பதுதான் பிரச்சினை. எனவே சைட் சாடிக் மற்றும்  எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் இன்னும் தங்கள் ஒதுக்கீட்டைப் பெறவில்லை என்பதை நீங்கள் அறிய விரும்பினால் எதிர்க்கட்சித் தலைவரிடம் (ஹம்சா) கேளுங்கள் என்று ஃபஹ்மி முன்பு டுவிட்டர் என்று அழைக்கப்பட்ட X இல் வீடியோ பதிவில் கூறினார்.

நேட்டோ (நடவடிக்கை இல்லை, பேச்சு மட்டும்) அரசாங்கம் மீதான மூவார் நாடாளுமன்ற உறுப்பினரின் தாக்குதலுக்கு ஃபஹ்மி பதிலளித்தார். இது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சமமான ஒதுக்கீடுகளுக்கு உத்தரவாதம் அளிக்கத் தவறிவிட்டதாகவும், அமைச்சர்கள் தங்கள் சொத்துக்களை அறிவிக்கத் தவறியதாகவும் அவர் கூறினார்.

10ஆவது பிரதமரானால் அரசியல்வாதிகள் எதிர்கொள்ளும் ஊழல் வழக்குகளை கைவிட மாட்டோம் என்று கடந்த ஆண்டு அளித்த வாக்குறுதியை பிரதமர் அன்வார் இப்ராஹிம் நிறைவேற்றவில்லை என்றும் மூடா நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம் சாட்டினார். சொத்து அறிவிப்பு விவகாரம் குறித்து சைட் சாடிக்கின் கருத்துகளுக்குப் பதிலளித்த ஃபஹ்மி, பிரதமர் தற்போது மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் உட்பட பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து இந்த செயல்முறையை மேலும் வெளிப்படைத்தன்மையுடன் மாற்றியமைப்பதாக கூறினார்.

நீங்கள் (சைட் சாடிக்) கூடுதல் விவரங்களைப் பெற விரும்பினால், பிரதமரின் கேள்வி நேரத்தில் பதிலளிக்க ஒரு கேள்வியை மக்களவையில் முன் வைக்கலாம் என்று ஃபஹ்மி மேலும் கூறினார். ஊழல் வழக்குகள் பற்றி ஃபஹ்மி கருத்து தெரிவிக்கையில், அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மற்றும் முஹிடின் யாசின் போன்ற உயர்மட்ட அரசியல்வாதிகள் எதிர்கொள்ளும் எந்த நீதிமன்ற வழக்குகளிலும் ஒற்றுமை அரசாங்கம் ஒருபோதும் தலையிடவில்லை என்று கூறினார்.

தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சராகவும் இருக்கும் ஃபஹ்மி, சட்டத்துறை அலுவலகம் (AGC) மற்றும் சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்த அமைச்சர் Azalina Othman Said இருவரும் ஜாஹிட் தனது யயாசான் அகல்புடி ஊழல் வழக்கில் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டதை விளக்கியுள்ளனர். கூட்டரசு அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளபடி, எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கைகளையும்  நடத்த அல்லது நிறுத்துவதற்கு AGC  அதிகாரம் உள்ளது என்றார். ஒருவேளை சைட் சாடிக்கால் இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம் என்று ஃபஹ்மி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here