விமான சாகசத்தின் போது விபத்து – இரண்டு விமானிகள் பலி

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் ரெனோ விமான கண்காட்சி நடந்தது. இதில் ஏராளமான விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன. அப்போது டி-6 கோல்டு என்ற விமானம் மற்றொரு விமானம் மீது மோதியது. இந்த விபத்தில் விமானம் கீழே விழுந்து இரு விமானிகளும் பலியாகினர்.

இந்த சம்பவம் குறித்து ரெனோ ஏர் ரேசிங் அசோசியேஷன் அதிகாரிகள் கூறுகையில், T-6 தங்கப் போட்டியின் முடிவில் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டன என்று தெரிவித்தார். மற்ற விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. மேலும் இறந்த விமானிகளின் பெயர்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here