சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக மாநாடு 2023

ன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் நேற்று சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை 2023 மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைத்தது.

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் இந்த மாநாடு அக்டோபர் 19 தொடங்கி 22ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு நடைபெறும் என மாநில முதலீட்டு, வர்த்தகத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் இங் சீ ஹான் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில அரசு இந்த வர்த்தக மாநாட்டை ஆரம்பத்தில் தொடக்கிவைத்தது, இதனை இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் ஏற்று நடத்தும் பொறுப்பை வகிக்கிறது.

வர்த்தக முத்திரைகளை அறிமுகம் செய்யும் ஒரு தளமாகவும் வர்த்தகத்துறையினருக்கு ஒரு சரியான களமாகவும் இந்த மாநாடு அமைகிறது.

அக்டோபரில் நடைபெறும் இந்த மாநாடு சிலாங்கூர், ஆசியானுக்கான நுழைவாயில் என்ற கருப்பொருளைக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஆயிரம் வர்த்தகச் சாவடிகள் இம்மாநாட்டின்போது அமைக்கப்பட உள்ளன.

50 ஆயிரம் பேர் வருகை தருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

1.5 பில்லியன் ரிங்கிட் அளவுக்கு வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here