ஷா ஆலம்,
இவ்வாண்டு உள்நாட்டு சுற்றுப்பயணிகளின் முதன்மை தேர்வான 3 மாநிலங்களில் சிலாங்கூரும் உள்ளதாக அம்மாநில ஊராட்சி, சுற்றுலாத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் இங் சூ லிம் தெரிவித்தார். இவ்வாண்டு தொடங்கி இதுவரையில் சிலாங் கூர் மாநிலத்திற்கு மொத்தமாக 6.4 மில்லியன் சுற்றுப்பயணிகள் வந்துள்ளனர். அதிலும் கடந்தாண்டு மட்டும் சிலாங்கூர் மாநிலத்திற்கு 22 மில்லியன் சுற்றுப்பயணிகள் வந்த நிலையில் உள்நாட்டு சுற்றுப்பயணிகள் அதிக எண் ணிக்கையில் வருகை தந்த மாநிலமாகவும் இம்மாநிலம் விளங்கியது என அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக நேற்று டாருல் ஏசான் கட்டடத்தில் டுரிஸம் சிலாங்கூர் பணியாளர் களுடனான கலந்துரையாடல், செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அவருடன் டுரிஸம் சிலாங்கூரின் தலைமைச் செயல் அதிகாரி அஸ்ருல் ஷா முகமட்டும் வந்திருந்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய இங் சு லிம், கடந்தாண்டு சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்ட சேவைத்துறையினர் 40.9 மில்லியன் ரிங்கிட் வரை யிலான உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் தங்களின் பங்களிப்பை 26.5 விழுக்காடு வரை வழங்கியுள்ளனர் என அவர் மேலும் கூறினார். முன்னதாக சிலாங்கூர் மாநில அரசாங்கம் டுரிஸம் சிலாங்கூர் வாயிலாக சுற்றுப்பயணிகளைக் கவரக்கூடிய சுற்றுலா அம்ங்ங்கள் நிறைந்த பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தி இருந்தது.
அதேபோல் அனைத்துலக ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்ட மற்றொரு பிரச்சாரமும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த இரண்டு பிரச்சாரங்களும் கடந்த 2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதாகும். சிலாங்கூர் அடைவுநிலையை நிலைநிறுத்த சிலாங்கூர் மாநில அரசாங்கம் அடுத்தாண்டு தொடங்கி உயர்நிலை யிலான பல விளம்பரங்களையும் செயல் திட்டங்களையும் ஏற்பாடு செய்ய முனையும்.சுற்றுலாத்துறையை மீட்சிபெறச் செய்வதில் மாநிலத்திற்கு இன்னும் ஆக்கப்பூர்வமான வியூகமிக்க வழித்தடங்கள் தேவை என்பதை மாநில அரசாங்கம் உணர்கின்றது.
இதற்கு முன்னதாக சமூக வலைத்தளங்கள், இலக்கவியல் தளங்களில் மேற்கொள்ளப் பட்ட விளம்பர நடவடிக்கைகள் பயன் அளித்துள்ளன எனவும் இங் சுய் லிம் சுட்டிக் காட்டினார்.




















