கோலாலம்பூர்:
காலை 9 மணி நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மொத்தம் 299 பேர் மூன்று மாநிலங்களில் உள்ள நான்கு நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 8 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேருடன் ஒப்பிடும்போது, இன்று காலை மொத்தம் 38 பேராக அதிகரித்துள்ளது என்று பேரிடர் மேலாண்மைக் குழுச் செயலகம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சபாவில், பியூஃபோர்ட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 228 பேராக உள்ளது, இதில் ஐந்து கிராமங்களைச் சேர்ந்த 72 குடும்பங்கள் அடங்குகினறனர். அவர்கள் அனைவரும் PPS டேவான் சிலாக்கனில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அது தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சரவாக்கில் வெள்ளம் காரணமாக தங்குமிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், அங்கு 7 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் இன்னமும் தங்கியுள்ளனர் என்றும் பேரிடர் மேலாண்மைக் குழுச் செயலகம் தெரிவித்துள்ளது.