வெற்றிகரமான ஆரம்பத்துடன் MSK & KS Cinema வின் The Road. !

நேற்று அக்டோபர் 6ஆம் தேதி உலகெங்கும் வெளியிடப்பட்ட ‘தி ரோட்’ திரைப் படத்தை மலேசியாவில் MSK Cinemas Sdn Bhd மற்றும் KS Movie Sdn Bhd இணைந்து வெளி யிட்டன.வெற்றிகரமான ஆரம்பத்துடன் ரசிகர்கள் பட்டாளம் குவிய திரையரங் குகள் நிரம்பிவழிகின்றன. நிச்சயமாக மிகப்பெரும் வெற்றியை எட்டும் இந்த திரைப் படம்.

இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் த்ரிஷா, சந்தோஷ் பிரதாப், ஷபீர் கல்ல ராக்கல், மியா ஜார்ஜ், எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள தி ரோடு திரைப்படம் இன்று வெளியானது. நடிகை த்ரிஷா லீடு ரோலில் நடித்துள்ள தி ரோடு திரைப் படம் பக்காவான த்ரில்லர் படமாக உருவாகி உள்ள நிலை யில், சாலை விபத்து களில் இப்படியெல்லாம் கிரைம் நடக் கிறதா என்கிற பதை பதைக்கும் விஷயங்களும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளன. தி ரோடு திரைப்படத்தின் கதை, பாசிட்டிவ், மைனஸ் உள்ளிட்ட முழுமையான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

மீரா எனும் கதாபாத்திரத்தில் அன்பான குடும்பத் தலைவியாக த்ரிஷா நடித்துள்ளார்.  அவரது கணவர் சந்தோஷ் பிரதாப் சமீபத்திய படங்களில் சாவதற்காகவே அளவு எடுத்து செஞ்ச கதாபாத்திரமாக பத்து தல, கழுவேத்தி மூர்க்கன் உள்ளிட்ட படங்களில் நடித்ததை போலவே இந்த படத்திலும் அவரை காட்டும் போதே டெத் கன்ஃபார்ம் என தெரிகிறது. தந்தையும், மகனும் ஜாலி ட்ரிப் போக ஆசைப்பட ஏற்படும் விபத்தில் இறக்கின்றனர். அதை அறியும் மீராவுக்கு சில சந்தேகங்கள் வர அந்த இடத்திற்கு செல்கிறார்.

பல பேர் அதே இடத்தில் சாலை விபத்தில் இறப்பதற்கு பின்னணியில் ஒரு பெரிய திருட்டு கும்பல் மற்றும் கிரைம் இருப்பது தெரிய வர, அதை தானே கண்டுபிடிக்க முயல் வதும் அதில் வென்றாரா? தோற்றாரா என்பது தான் படத் தின் கதை. படம்

ஒரு பக்கம் த்ரிஷாவின் கதை பயணிக்கும் அதே அளவுக்கு இன்னொரு பக்கம் படத்தின் வில்லனாக நடித்துள்ள டான்ஸிங் ரோஸ் ஷபீர் கல்லராக் கல் கதையும் தெளிவாக இயக்குநர் சொல்லி உள்ளார். ஆனால், அது கதைக்கு தேவையாக இருந்தாலும், படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு போரிங்கான உணர்வை ஏற்படுத்துகிறது. நடிகை த்ரிஷாவின் நடிப்பு தான் படத்தின் ஹைலைட். மொத்த படத் தையும் தாங்கி நடித்து மிரட்டுகிறார். அவரது அந்த டிரான்ஸ்ஃபர்மேஷன் ஆகும் காட்சிகளும், கணவர் மற்றும் மகனை இழந்து விட்டு தவிக்கும் தவிப்பு என நடிப்பில் மிரட்டியிருக்கிறார். அதே போல ஷபீர் நடிப்பும் அப்ளாஸ் அள்ளுகிறது. கான்ஸ்ட பிளாக வரும் எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, மியா ஜார்ஜ் என அனைத்து நடிகர்களின் நடிப்பும் பிரம்மாதம். சாம் சி.எஸ். இசை அரக்கனாகவே மாறியுள்ளார். படத்தின் இரண்டாம் பாகத்தில் இருக்கும் பரபரப்பு முதல் பாகத்தில் கதையை ஆரம்பிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் உருவாகியிருப்பதாக  பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஹீரோயின் ஏன் போலீஸ் உதவியை நாடாமல் தனியாகவே போராட நினைக்கிறார் என்கிற கேள்விகளும், சாலை விபத்து கிரைமுக்கு பின்னால் பெரிய மாஃபியா இருப்பதாக பயமுறுத்துவதும் சில சந்தேகங்களை கிளப்புகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here