நீலாய், புக்கிட் ரம்பாய் பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசு குறியீடு பதிவு

கோலாலம்பூர்:

நாடு முழுவதும் புகைமூட்டத்தின் தாக்கம் ஒவ்வொருநாளும் அதிகரித்துவரும் நிலையில், நெகிரி செம்பிலான் நீலாய் பகுதியில் அதிகளவில் ஆரோக்கியமற்ற காற்று மாசு குறியீடு பதிவாகியுள்ளது. அங்கு காற்று மாசு குறியீடு 151-ஆகவும், அதேநேரத்தில் மலாக்காவின் ரம்பாய் பகுதியில் காற்று மாசுக் குறியீடு 112-ஆகவும் பதிவாகியுள்ளது.

இன்று காலை 9 மணி நிலவரப்படி இப்பகுதியில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு பதிவாகியுள்ளதாக மலேசிய காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பின் (APIMS), இணையதளத்தில் உள்ள தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 68 காற்றின் தர கண்காணிப்பு நிலையங்களின் அடிப்படையில் ஒவ்வொரு மணி நேரமும் IPU தரவு வெளியிடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here