Caltex ஸ்டேஷனில் உள்ள FamilyMart இல் இன துவேசமா?

ஜார்ஜ்டவுன்:

பினாங்கில் முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் இடையே பணம் செலுத்தும் முகப்பிடங்கள் பிரிக்கப்பட்டது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான காணொளி தொடர்பில் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சம்பந்தப்பட்ட கன்வீனியன்ஸ் ஸ்டோரை இயக்கும் FamilyMart தொடர்பில் வந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் நிச்சயம் விசாரணைகள் நடத்தப்படும் என்று, Caltex பெட்ரோல் நிலையத்தை நடத்தும் Chevron Malaysia நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

புக்கிட் மெர்தாஜாமில் உள்ள கடையில் நடந்ததாக கூறப்படும் இந்த விவகாரத்தை Chevron கடுமையாக கருதுவதாகவும், இனங்களுக்கிடையிலான இடைவெளியை அதிகரிப்பதாகக் கூறப்படும் இந்த பிரிவினைச் செயலை நிச்சயம் விசாரிக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்த பிரச்சினை தொடர்பில் புகார்தாரர் முன் வந்து உள்ளூராட்சி மன்றத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும், MCMC இது தொடர்பில் விசாரிக்கும் என்று நம்புகிறேன்,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here