இந்த வாரம் மலேசியா வருகிறார் தாய்லாந்து பிரதமர்

பேங்காக் :

லேசியா-தாய்லாந்துக்கிடையே ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க தாய்லாந்தின் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இந்த வாரம் மலேசியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

அவர் தாய்லாந்துப் பிரதமாராக பதவியேற்று மலேசியாவிற்கு வருகைதரும் முதலாவது அதிகாரப்பூர்வ பயணமாகும்.

அக்டோபர் 11 ஆம் தேதி தாய்லாந்து , ஸ்ரேத்தா மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்திப்பார் என்றும், இந்தச் சந்திப்பில் மலேசியா இடையே வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் எல்லை மேம்பாடு, தாய்லாந்தின் தெற்கு எல்லை மாநிலங்கள், வடக்கு மாநிலங்களை உள்ளடக்கிய ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிப்பார் எனவும் நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here