அறுவை சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பிய ஜக்கி வாசுதேவ்.. டெல்லி அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களுக்கு நன்றி

டெல்லி: மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த ஜக்கி வாசுதேவ் டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, குணமடைந்து வந்தார். இந்நிலையில், ஜக்கி வாசுதேவ் உடல்நிலை தேறிய நிலையில், அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

ஜக்கி வாசுதேவுக்கு அண்மைக் காலமாக ஒற்றைத் தலைவலி இருந்ததாகவும் சில நாட்களுக்கு முன்பு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிடி ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, அவரது மூளையில், ரத்தக் கசிவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில், ஜக்கி வாசுதேவ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ஜக்கி வாசுதேவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது நலமுடன் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, ஜக்கி வாசுதேவ் மருத்துவமனையில் இருக்கும் வீடியோவும் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஜக்கி வாசுதேவின் உடல்நிலை வேகமாக மீண்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

ஜக்கி வாசுதேவ் செய்தித்தாள் படிக்கும் வீடியோவும் அண்மையில் வெளியாகியிருந்தது. அவர் நன்றாக குணமடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஜக்கி வாசுதேவ் டெல்லி இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட 10 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

கடங்த மார்ச் 17ஆம் தேதியன்று அவசர மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சத்குரு ஜக்கி வாசுதேவ் இன்று டெல்லி இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. ‏டாக்டர் வினித் சூரி, டாக்டர் பிரணவ் குமார், டாக்டர் சுதீர் தியாகி, டாக்டர் எஸ் சட்டர்ஜி மற்றும் அப்பல்லோ மருத்துவமனை குழுவினருக்கும் அவர்களின் ஆதரவு மற்றும் கவனிப்புக்கும் ஈஷா அறக்கட்டளை நன்றி தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் சத்குரு அனைவரிடமிருந்தும் பெற்ற அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here