கார்த்தியின் 26வது படத்தில் இணைகிறார் கீர்த்தி ஷெட்டி?

நடிகர் கார்த்தி நடித்து வரும் 26வது படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

‘ஜிப்சி’ படத்திற்கு பிறகு ராஜுமுருகன் இயக்கி வரும் படம் ஜப்பான். இதில் கார்த்தி நாயகனாகவும், அனு இமானுவேல் நாயகியாகவும் நடிக்கின்றனர். இது கார்த்தியின் 25வது படமாகும்.

இதில் தெலுங்கு நடிகர் சுனில், இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தை அடுத்து கார்த்தி தனது 26வது படத்திலும் நடித்து வருகிறார். நலன் குமாரசாமி இயக்கும் பெயிரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு 50% முடிவடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் நடிகர் சத்யராஜ் வில்லனாக கார்த்தியுடன் இணைந்து நடித்துள்ளார்.

‘தம்பி’, ‘கடைக்குட்டி சிங்கம்’ ஆகிய படங்களுக்கு பிறகு நடிகர் சத்யராஜ், கார்த்தி உடன் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கார்த்தி எம்ஜிஆர் ரசிகனாக நடித்துள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here