தாய்லாந்தில் வெள்ளம் ;34 மாவட்டங்கள் பாதிப்பு

பேங்காக்:

தாய்லாந்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, வடகிழக்குப் பகுதிகளில் உள்ள 34 மாவட்டங்களில் நிலைமை மெல்ல சீரடைந்து வருகிறது.

எனினும், அடுத்த மூன்று நாட்களில் வடக்கிலும், வடகிழக்கிலும் பல மாகாணங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படலாம் என்று அந்நாட்டு தேசிய நீர்வள அலுவலகம் நேற்று செவ்வாய்க்கிழமை எச்சரித்துள்ளது.

ஏற்கனவே அங்கு 631 கிராமங்களில் 16,500 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏராளமான விவசாய நிலங்களும் பாழ்பட்டுள்ளன. இந்நிலையில் தேசிய நீர்வள அலுவலகத்தின் இந்த அறிவிப்பு மக்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

தென் சீனக் கடற்கரைக்கு அருகில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக தாய்லாந்தில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், நாட்டின் பல பகுதிகளில் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று அவலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

தாய்லாந்தில் தற்போது நாடு முழுவதும் உள்ள நீர்த் தேக்கங்களில் ஏறக்குறைய 57,512 பில்லியன் கன மீட்டர் தண்ணீர் நிறை ந்துள்ளது. இது நீர்த்தேக்கங் களின் மொத்த கொள்ளளவில் 70 விழுக்காடு ஆகும்.

எனினும், 2022ஆம் ஆண்டில் இருந்ததைவிட 8.9 பில்லியன் கன மீட்டர் குறைவு. எனினும், அடுத்த வறண்ட பருவகாலத்தில் விவசாயத்திற்கு போதுமானதாக இருக்கும்.

யோம் நதி, முன் நதி, யுங் நதி ஆகிய மூன்று ஆறுகளில் நீர்நிறைந்தோடுவதால், கரைகள் உடைபடக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் தேசிய நீர்வள அலுவலகம் கூறியுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here