லண்டன்:
இங்கிலாந்துத் தலைநகர் லண்டனில் இருக்கும் லியூட்டன் விமான நிலையத்தில் திடீரென தீப்பிடித்ததில் இன்று புதன்கிழமை பிற்பகல் வரை அனைத்து விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
அந்த விமான நிலையத்தில் மோசமான தீ மூண்டதால் வாகன நிறுத்துமிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதனால் பாதுகாப்பை முன்னிட்டு உள்ளூர் நேரப்படி புதன்கிழமை பிற்பகல் 12 மணிவரை விமானச் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக லியூட்டன் விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
நான்கு தீயணைப்பாளர்கள், ஒரு விமான நிலைய ஊழியர் உட்பட காயமுற்ற ஐவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்த இன்னொருவருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
லியூட்டன் விமான நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்ட வாகன நிறுத்துமிடத்தில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு ஒன்பது மணியளவில் தீ மூண்டது.