புத்ராஜெயா,
டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோவின் அரசியல் செயலாளராக முன்னாள் செனட்டர் சுரேஷ் சிங், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இப்பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது. சுரேஷ் சிங் அமைச்சர் கோபிந்த் சிங்கைப் பிரதிநிதித்து இந்தியர்கள் ங்ார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அமைச்சரின் மானியங்களையும் உதவிகளையும் வழங்கி வருகிறார்.
ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகள், பொது இயக்கங்கள், ஆகியவற்றுக்கு இந்த உதவிகளும் மானியங்களும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. நாட்டில் இந்திய சமுதாயத்தின் நலன்கள் காக்கப்பட வேண்டும் என்ற பிரதமரின் உத்தரவை கோபிந்த் சிங் முழுமையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் நிறைவேற்றி வருகிறார்.
இந்திய சமுதாயத்திற்குச் ஙே்ர வேண்டிய உதவிகளையும் மானியங்களையும் அமைச்சரின் சார்பில் தாம் தொடர்ந்து வழங்கி வருவதாக சுரேஷ் சிங் குறிப்பிட்டார். தம் மீது நம்பிக்கை வைத்து பிரதமரிடம் இப்பதவிக்குத் தமது பெயரை சிபாரிசு செய்த கோபிந்த் சிங்கிற்கும் அதனை ஏற்றுக்கொண்ட பிரதமர் அன்வாருக்கும் அவர் நன்றி சொன்னார்.





















