நாட்டில் இதுவரை சுமார் 1.3 மில்லியன் மலேசியர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

பெட்டாலிங் ஜெயா (ஜூன் 12) : மலேசியாவில் கோவிட் -19 தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,297,818 பேராவர். இந்த எண்ணிக்கை கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டாவது அளவையும் பெற்று விட்டவர்களது எண்ணிக்கை என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஆதம் பாபா தெரிவித்துள்ளார்.

இதனை அமைச்சர் தனது டுவிட்டர் தளத்தில் ஒரு பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். இன்று (ஜூன்12) மட்டும் மொத்தம் 2,929,736 பேர் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து,நாட்டில் தடுப்பூசி செலுத்தியவர்களது மொத்த எண்ணிக்கையை 4,227,554ஆக அதிகரித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன்11) அன்று மொத்தமாக 124,618 பேர் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டனர் என்றும் குறிப்பிட்டார். மேலும் அதிகளவான தடுப்பூசியை செலுத்திக்கொண்ட மாநிலமாக சிலாங்கூரில் 170,855 பேர் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்டுள்ளதுடன் அதைத் தொடர்ந்து முறையே சரவாக் (133,516), கோலாலம்பூர் (122,564), பேராக் (121,740) மற்றும் ஜொகூர் (118,317) ஆகிய எண்ணிக்கையில் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், நாட்டில் மொத்தம் 13,757,093 பேர் அல்லது 56.7 விழுக்காடு பெரியவர்கள் தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்திற்கு பதிவு செய்துள்ளனர், இப் பதிவிலும் அதிக எண்ணிக்கையிலான பதிவுகளை சிலாங்கூரில் 3,503,976 பேரும் அதைத் தொடர்ந்து ஜோகூர் (1,716,130) மற்றும் சரவாக் (1,318,655) முன் பதிவு செய்து கொண்டுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here