நாட்டில் 424,000 குழந்தைகள் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்- சுகாதார அமைச்சகம்

சிகாமாட்:

லேசியாவில் கடந்த ஆண்டு முழுவதும் மொத்தம் 424,000 குழந்தைகளுக்கு மனநலப் பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த எண்ணிக்கை சுகாதார அமைச்சினால் (KKM) மேற்கொள்ளப்பட்ட தேசிய சுகாதாரம் மற்றும் நோயுற்ற ஆய்வு (NHMS) அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிக்ஹா முஸ்தபா தெரிவித்தார்.

“இந்தப் போக்கு கோவிட்-19க்குப் பிறகு அதிகரித்துக் கொண்டே போகிறது என்று அவர் கவலை தெரிவித்தார்.

“இந்த விஷயத்தை சுகாதார அமைச்சகம் மிகவும் தீவிரமாக கவனித்து வருகிறது என்றும் இதற்கு பல தலையீடுகள் மற்றும் குறிப்பாக மலேசிய கல்வி அமைச்சகம் (KPM) உட்பட பிற குழந்தைகள் தொடர்பான நிறுவனங்களும் தமது அமைச்சகத்துடன் ஒத்துழைக்கின்றன என்று அவ கூறினார்.

மேலும் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களின் கவனமின்மையே பல குழந்தைகள் மனநலப் பிரச்சினைகளை அனுபவிக்க முக்கிய காரணமாகவுள்ளது என்று டாக்டர் ஜாலிஹா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here