வேலைப்பளு, களைப்பு; தொழிலைவிட்டு விலகும் ஒப்பந்த மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

பெட்டாலிங் ஜெயா:

நாட்டில் மருத்துவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருப்பதால் அத்தொழிலிலிருந்து அதிகமானோர் விலகி வருகின்றனர் என புள்ளிங்கள் தெரிவிக்கின்றன.

வேலையைச் செய்து செய்து அவர்கள் களைத்துப் போகின்றனர் மேலும் வேலையிடத்தில் அவர்கள் மிகுந்த துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்று அண்மையில் மேற்கொண்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இந்த விஷயம் தொடர்பில் மலேசிய சுகாதார அமைச்சு தலையிடாத வரை தீராத தலைவலியாக இருக்கும் என்று ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேசிய மருத்துவர் தினத்தையொட்டி நடந்த நிகழ்வில் பேசிய சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஃபாமி ஃபாட்ஸில் கூறுகையில், 2022ஆம் ஆண்டில் மலேசிய ஒப்பந்த மருத்துவர்களின் பதவி விலகல் 1,131 விழுக்காடு அதிகரித்துள்ளதை அரசாங்கம் கவனத்தில் கொள்கிறது என்றார்.

2022ஆம் ஆண்டில் 1,354 ஒப்பந்த மருத்துவர்கள் பதவி விலகினர். இந்த எண்ணிக்கை 2017ஆம் ஆண்டில் 110 என்ற எண்ணிக்கையில் இருந்தது.

பதவி விளக்குபவர்களின் என்னிக்கி ஆண்டுக்கு ஆண்டு இந்தப்போக்கு கூடிக்கொண்டே வருகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டில் 168 ஒப்பந்த மருத்துவர்கள் தொழிலைவிட்டு விலகினர். தொடர்ந்து 2019ஆம் ஆண்டில் 479 பேரும், 2020ல் 511 பேரும் 2021ல் 768 பேரும் 2022ல் 1,354 பேரும் பதவி விலகினர் என்று சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன என்றார்.

நாட்டில் உள்ள ஏறக்குறைய 30 முதல் 40 விழுக்காடு மருத்துவர்கள் தங்களுடைய தொழிலில் சில வகையான துன்புறுத்தல்களைச் சந்திக்கின்றனர் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here