கோலாலம்பூர்:
இந்த ஆண்டு டிசம்பருக்குள் மொத்தம் 2,083 ஒப்பந்த மருத்துவர்களை நிரந்தரப் பணியிடங்களில் அமர்த்தப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.
தங்களை நிரந்தர மருத்துவ பணியில் வேலைக்கு அமர்தும்படி ஒப்பந்த மருத்துவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த தருணத்தில் வரும் டிசம்பர் மாதம் 2,083 ஒப்பந்த மருத்துவர்களை நிரந்தர பணியில் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா அறிவித்துள்ளது ஒப்பந்த மருத்துவர்களின் வேண்டுதலுக்கு அரசு செவிசாய்துள்ளதை பறைசாற்றுகிறது.
ஒப்பந்த மருத்துவ அதிகாரிகளின் பணி நியமனத்தின் ஒரு பகுதி ஜூலை மாத இறுதியில் நிறைவடைந்ததாக சுகாதார அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அவரது கருத்துப்படி, அந்த எண்ணிக்கை 2023 பட்ஜெட்டில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்த 12,800 நிரந்தர பதவிகளில் ஒரு பகுதியாகும்.
தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ஒப்பந்த மருத்துவர்களுக்கு 12,800 நிரந்தரப் பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.