மருத்துவரின் அலட்சியத்தால் இரு கால்களும் துண்டிப்பு; உதவி பொறியியலாளர் வழக்கு

ஷா ஆலம்:

ரு பிரபல தனியார் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணரின் அலட்சியத்தால், தான் ஊனமுற்றவராக மாறியதாக ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் துணை பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

41 வயதான இஸ்மான் இப்ராஹிம் என்று அறியப்படும் பாதிக்கப்பட்டவர், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவரின் அலட்சியத்தால் தன்னுடைய இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டதாகக் கூறி, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

“தான் குடல் அழற்சிக்காக மருத்துவமனைக்குச் சென்றதாகவும், ஆனால் அறுவைச் சிகிச்சை நிபுணர் முக்கிய இரத்த நாளங்களை துளைத்து சிகிச்சை செய்தபோது, அந்த சிகிச்சையை சரியாக செய்யவில்லை என்றும், இதனால் இரண்டு கால்களும் கருப்பாக மாறியது,” என்றும், பின்னர், இஸ்மான் மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும், அங்கு தன்னுடைய உயிரைக் காப்பாற்ற தன்னுடைய கால்கள் தொடை வரை துண்டிக்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.

அந்த நேரத்தில் அவரது மனைவி நான்காவது குழந்தையுடன் கர்ப்பமாக இருந்ததாகவும், கால்கள் துண்டிக்கப்பட்ட தனது நிலையை மற்றைய மூன்று குழந்தைகளும் 10 நாட்கள் வரை தான் சொல்லாது மறைத்ததாகவும், பின்னர் இரு கால்களுமின்றி தன்னை அவர்கள் பார்த்தபோது கதறி அழுதனர் என்று அவர் சொன்னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here