பெட்ரோல் நிலையத்தில் இளைஞர் ஒருவரை தாக்கும் வீடியோ தொடர்பில் 24 பேர் கைது!

பட்டர்வெர்த்:

ளைஞர்கள் பலர் இணைந்து ஒருவரைத் தாக்கும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, 24 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இங்குள்ள பாகன் அஜாமில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் குறித்த தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், மூன்று வினாடிகள் கொண்ட வீடியோ நேற்று சமூக ஊடகங்களில் பரவியதாக வட செபெராங் பிறை காவல்துறையின் தலைவர் துணை ஆணையர் முகமட் அஸ்ரி ஷாஃபி தெரிவித்தார்.

“மத ஊர்வலத்தின் போது பாதிக்கப்பட்டவர் வேண்டுமென்றே தனது மோட்டார் சைக்கிளின் புகை போக்கியை (motorcycle exhaust) உரக்க ஒலிக்கச் செய்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.

“தாக்குதலைத் தொடர்ந்து, விசாரணைக்கு உதவ 16 முதல் 24 வயதுடைய 24 ஆண்களை நாங்கள் தடுத்து வைத்தோம். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஏற்கனவே இரண்டு குற்றப் பதிவுகள் கொண்டவர்,” என்று அவர் கூறினார்.

இவ்வழக்கு கலவரத்திற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 147-ன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here