காசாவில் என் குடும்பம், தனியாக நான்! PhD பட்டத்தை ஏற்றுக்கொள்வது வருத்தமாக உள்ளது

KUALA NERUS,

“குடும்ப உறுப்பினர்கள் இல்லாமல் சோகமான நிலையில் இருந்தபோதிலும், இந்த பட்டத்தைப் பெற மேடை ஏறுவதற்கு என் மனதை பலப்படுத்தினேன்” என்று முனைவர் பட்டம் (PhD) பாலஸ்தீனிய பட்டதாரி டாக்டர் ஹனன் கமெல் முகமது சாத், 51 கூறினார்.

இன்று திவான் அல்-முக்தாபி பில்லா ஷா யுனிஸ்ஸாவில் நடைபெற்ற 15வது யுனிசா பட்டமளிப்பு இதுல் இல்மி மஜ்லிஸில் PhD, முதுகலை, இளங்கலை மற்றும் டிப்ளோமா பட்டங்களைப் பெற்ற 3,608 யுனிஸ்சா பட்டதாரிகளில் ஹனான் கமெலும் ஒருவர்.

குடும்பத்தின் அவல நிலையை விவரித்த ஹனன் கமெல், காசாவில் உள்ள குடும் பத்தை நேற்று, தாம் கடைசியாக சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டதாக கூறினார்.நேற்று என்னை வாழ்த்துவதற்கு குடும்பத்தினருக்கு நேரம் கிடைத்தது, ஆனால் இன்று அவர்கள் நான் அடைந்த வெற்றியை அவர்களால் கொண்டாட முடிய வில்லை என்பது வருத்தமாக இருந்தது.

இருப்பினும், காஸாவில் குடும்பம் படும் அவலத்தை நினைத்து சோகத்துடநும் உங்கள் முன் மகிழ்ச்சியாய் இருப்பவர் போலவும் இருக்கிறேன். என் குடும்பத்தினருக்கு கடவுளின் பாதுகாப்பு வழங்கப்படும் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

காஸாவில் இணையம் பலவீனமாக உள்ளதாலும், அடிக்கடி துண்டிக்கப்பட்டதாலும் குறுஞ்செய்திகளுக்கு மட்டுமே பதிலளிக்க முடிந்தது என்று ஹனன் கமெல் கூறினார்.

அவர் கூறுகையில், இஸ்ரேல் ஆட்சியின் தொடர் தாக்குதல்களால் காசாவில் நிலைமை மிகவும் மோசமாகி, மக்கள் வாழ பாதுகாப்பான இடம் இல்லை.”காசா மீது குண்டுவீசி நடத்திய இஸ்ரேலின் நடவடிக்கைகளால் அங்கு வசிப்பவர்கள் பலர் குடும்ப உறுப்பினர்களை இழந்தது மட்டுமல்லாமல், தங்கள் வீடுகளையும் இழந் துள்ளனர். “இருப்பினும், எனது குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பான இடத்தில் இருப் பதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், அவர்கள் தொடர்ந்து உயிர் பிழைப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

“இந்த நிலை தொடருமா என்று எனக்குத் தெரியாது, இந்த வன்முறையை நிறுத்தவும், எனக்கு சுதந்திரம் கிடைக்கவும் நான் பிரார்த்தனை மட்டுமே செய்ய முடியும், நான் மலேசியாவில் தற்போதைக்கு வேலை தேட திட்டமிட்டுள்ளேன் என்றார்.

அனைத்து தரப்பினரும் காஸாவில் உள்ள மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.இந்த சிறப்பு விழாவில் மற்ற பட்டதாரிகளுடன் கலந்து கொள்ள முடியாததற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், ஏனெனில் தற்போது காஸா வின் நிலைமை மிகவும் ஆபத்தானது.எனவே, எல்லாவற்றிற்கும் நான் நன்றி தெரி விக்க விரும்புகிறேன், நன்றி தெரெங்கானு. நன்றி யுனிசா மற்றும் அனைவருக்கும் நன்றி,” என்று பட்டமளிப்பு விழாவில் வீடியோ திரையிடல் மூலம் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here