லீ குவான் யூவின் அரசியல் தந்திரங்களை மடானி அரசு பின்பற்றுகிறது என்கிறார் சனுசி

ஷா ஆலம்:

நாடாளுமன்றத்தின் 74 எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் ஒதுக்கீடுகளை பகிர்ந்தளிப்பதன் மூலம் கூட்டரசு நிர்வாகம் நியாயமாக இருக்க வேண்டும் என்று பாஸ் உயர்மட்ட தலைவர் டத்தோஸ்ரீ முஹமட் சனுசி முஹமட் நூர் கோரியுள்ளார்.

நேற்றிரவு நடந்த பாஸின் 69 வது ஆண்டு பொதுக்கூட்டத்துடன் இணைந்து நடைபெற்ற பிரச்சாரத்தின்போது, இந்த விஷயத்தில் கூட்டாட்சி நிர்வாகம் நியாயமற்ற நடைமுறைகளை (‘pilih bulu’) நாடக்கூடாது என்று கெடா மந்திரி பெசார் கூறினார்.

மலேசியாவில் உள்ள அனைத்து மக்களின் நலன் மற்றும் வாழ்வாதாரம் அவர்களின் பொறுப்பு. அவர்கள் ”pilih bulu’.வில் ஈடுபடக்கூடாது என்றார்.

“74 பெரிக்காத்தான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த ஒதுக்கீட்டையும் (கூட்டாட்சி நிர்வாகத்திடம் இருந்து) பெறவில்லை . “ஏன்? அவர்கள் எங்களை (எதிர்க்கட்சி எம்.பி.க்கள்) தங்கள் பகுதியாக இல்லை என்று கருதுவதால். இது பாரபட்சம், இது தவறு” என்று சனுசி கூறினார்.

“கெடாவில், மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் வைத்திருக்கும் இடங்களில் சேவை மையங்கள் உட்பட அனைத்து தொகுதிகளுக்கும் நாங்கள் நிதி ஒதுக்குகிறோம்.

“பெர்லிஸும் இதே அணுகுமுறையை ஏற்றுக்கொண்டுள்ளது அதாவது ஒதுக்கீடுகளை அனைத்து மாநிலத் தொகுதிகளுக்கும் சமமாக விநியோகிப்பதை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துகிறது.

பாரபட்சம் எதுவும் இல்லை.இந்த விஷயத்தில் மத்திய அரசு கண்ணியத்துடன் செயல்படும் என நம்புகிறோம். இப்படித்தான் நீங்கள் அரசியல் செய்ய வேண்டும், அவர்கள் போல் ‘கோழைத்தனமாக’ செயல்படக்கூடாது,” என்றார்.

மேலும் மறைந்த முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூவின் அரசியல் தந்திரோபாயங்களை கூட்டாட்சி நிர்வாகம் ஏற்றுக்கொண்டதாகவும் சானுசி கூறினார்.

“நாங்கள் கேள்விகளை எழுப்பும் போது திருப்திகரமான பதில்களை வழங்க முடியாததால், அவர்களை விமர்சிப்பவர்கள் மீது அவர்கள் வழக்குத் தொடருவார்கள். எங்களை மிரட்டுவதற்காக அவர்கள் எங்கள் மீது வழக்குத் தொடுத்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.

சனுசி தனது உரையின் ஒரு கட்டத்தில் பாஸ் ஆதரவாளர்கள் ஒற்றுமை அரசாங்கத்தின் வீழ்ச்சிக்காக பிரார்த்தனை செய்யுமாறு அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here