மலேசியா, சவுதி அரேபியா வர்த்தக உறவுகளை மேம்படுத்த விரிவான திட்டங்கள்

மலேசியா- சவுதி அரேபியா இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஒரு புதிய நிலைக்கு கொண்டு வருவதற்கு அமைச்சர்கள் அளவிலான குழுவை அமைக்க மலேசியாவும் சவுதி அரேபியாவும் சனிக் கிழமை (அக் 21) ஒப்புக்கொண்டதாக தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் சவுதி அரேபியாவின் வர்த்தக அமைச்சர் டாக்டர் மஜித் அப்துல்லா அல்கசாபி ஆகியோருக்கு இடையே ரிட்ஸ்- கார்ல்டன் ஹோட்டலில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கூறினார்.

மேலும், வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஜாம்ப்ரி அப்துல் காதிர் மற்றும் சவுதி அரே பியாவுக்கான மலேசியத் தூதர் டத்தோ வான் ஜைதி வான் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்தக் குழு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதாரம் மற்றும் எதிர்காலத்தில் ஒத்துழைப்பின் வாய்ப்பு ஆகியவற் றைக் கண்காணிக்கும்.

வணிகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை ஒரு புதிய நிலைக்கு மேலும் அதிகரிப்பதில் மலேசியா மற்றும் சவூதி அரேபியாவின் தீவிரத்தன்மை மற்றும் அர்ப்பணிப்பை இது நிரூபிக்கிறது என்று தெங்கு ஜஃப்ருல் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here