கோலாப்பிலாவில் மலையேறும் நடவடிக்கையின்போது காணாமல்போன அறுவர் பாதுகாப்பாக மீட்பு

கோலாப்பிலா:

லு பெண்டுல் அருகே உள்ள குனுங் ஆங்சியில் மலையேறும் நடவடிக்கையின்போது தொலைந்து போனதாகக் கூறப்படும் ஆறு மலை ஏறுபவர்கள், நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

6 மலையேறிகளில் ஒரு பெண்ணுக்கு மட்டும் இடது காலில் சிறு காயம் ஏற்பட்டது என்று, நெகிரி செம்பிலான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பயிற்சிப் பிரிவு, துணை இயக்குநர் முகமட் ஹபீஸ் முகமட் ஷெரீப் கூறினார்.

“அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது, பாதிக்கப்பட்ட அனைவரும் நள்ளிரவு 12.05 மணியளவில் கடல் மட்டத்திலிருந்து 400 மீட்டர் உயரத்தில் இருந்தார்கள்.

நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் அடங்கிய குறித்த குழுவினர், அனைவரும் நள்ளிரவு 12.50 மணியளவில் வெற்றிகரமாக மலை அடிவாரத்தில் கொண்டு வரப்பட்டு ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

“அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது, ​​அவர்கள் பலவீனமான நிலையில் இருந்தனர், ஏனென்றால் அவர்கள் நேற்று மதியம் மட்டுமே சாப்பிட்டிருந்தார்கள். அங்கு குளிர் மற்றும் இருண்ட வானிலை நிலவியதால் மன அழுத்தத்திற்கு ஆளாகினர்” என்றார்.

“பாதிக்கப்பட்ட அனைவரும் சிலாங்கூரைச் சேர்ந்தவர்கள். மலையேறிகளில் ஒருவரின் தாய் நேற்று மதியம் வரை தனது மகனிடமிருந்து எந்த பதிலும் வராததைக் கண்டு தீயணைப்பு துறையை தொடர்பு கொண்டார்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here