சிமெந்து டிரெய்லர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் மாணவர் அபிஷித் மரணம்

ஆராவ்:

ராவ்விலுள்ள குவார் நாங்காவில் நேற்று மோட்டார் சைக்கிள் சிமெந்து டிரெய்லர் மீது மோதியதில் இரண்டாம் படிவ மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

SMK குவார் நாங்கா பள்ளியில் பயின்றுவரும் அபிஷித் A /L E வாங், 14, என்பவர், நேற்று ​​மாலை 4.20 மணியளவில் குறித்த விபத்தில் உயிரிழந்தார் என பெர்லிஸ் காவல்துறையின் பதில் தலைவர் துணை ஆணையர் பத்ருல்ஹிஷாம் பஹாருதீன் கூறினார்.

“பெர்லிஸ் கரெக்ஷனல் சென்டருக்கு அருகிலுள்ள ஜாலான் குவார் நங்காவின் மூன்றாவது சந்திப்பில் வந்தபோது, ​​​​சிமெந்து டிரெய்லர் இடதுபுறம் கோக் கிள்ளானை நோக்கித் திரும்பியது. அப்போது சிமெந்து டிரெய்லரின் இடது பக்கத்தில் இருந்ததாக நம்பப்படும் பாதிக்கப்பட்டவர் தனது மோட்டார் சைக்கிளைக் கட்டுப்படுத்தத் தவறியதால், அது டிரெய்லரின் மூலையில் மோதி விபத்துக்குள்ளானது.

“மோதலின் காரணமாக பாதிக்கப்பட்டவர் கிழே தூக்கி வீசப்பட்டதில், டிரெய்லரின் அடியில் சிக்கிக்கொண்டார்,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

கம்போங் சியாமில் வசித்து வந்த பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று அவர் கூறினார்.

“முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவரின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. இருப்பினும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் இன்னும் நடந்து வருகின்றன, மேலும் பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கங்காரில் உள்ள துவாங்கு பௌசியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

சாலை போக்குவரத்து சட்டம் 1987ன் பிரிவு 41 (1)ன் படி இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here