பேராக் வெள்ளம்: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 156 ஆக உயர்வு

ஈப்போ:

பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 குடும்பங்களைச் சேர்ந்த 156 பேராக அதிகரித்துள்ளது.

நேற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 92 பேராக இருந்த நிலையில் இன்று இதன் எண்ணிக்கை  156 பேராக உயர்ந்துள்ளது.

11 குடும்பங்களைச் சேர்ந்த 30 பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் அவர்களுக்கு இடமளிக்க நேற்று இரவு 8 மணிக்கு இறுதியாக ஒரு நிவாரண மையம் திறக்கப்பட்டது என்று பேராக் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சாங்காட் ஜொங்கில் உள்ள சுங்கை பிடோரின் நீர் மட்டம் சாதாரண மட்டமான இரண்டு மீட்டருடன் ஒப்பிடும்போது, தற்போது நீர்மட்டம் 4.10 மீற்றராக அபாய மட்டத்தில் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன மற்றும் வடிகால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

“ஸ்லிம் ரிவரில் உள்ள ஸ்லிம் ஆற்றின் நீர்மட்டமானது, சாதாரண அளவான 23.50 மீற்றரிலிருந்து 25.31 மீற்றர் அளவாகப் பதிவாகியுள்ள நிலையில், வீர் தஞ்சோங் துவாலாங்கில் உள்ள கிந்தா ஆற்றின் நீர்மட்டம் எச்சரிக்கை மட்டமான 13.92 மீட்டரை நெருங்கியுள்ளதாக JPS தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here