ஈப்போ:
இன்று (நவம்பர் 3) காலை 8 மணி நிலவரப்படி, பேராக்கின் மூன்று மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து 121 குடும்பங்களைச் சேர்ந்த 419 பேராக உள்ளது.
இது நேற்றிரவு 107 குடும்பங்களைச் சேர்ந்த 379 பேராக இருந்தது. என்று பேராக் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு (JPBN) செயலகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே 5 நிவாரண மையங்கள் இயங்கிவந்த நிலையில், நேற்று இரவு 11.30 மணியளவில் உலு பேராக் மாவட்டத்தில் உள்ள கம்போங் பாயா குவாக் லுவார் மண்டபத்தில் ஒரு PPS திறக்கப்பட்டது.




















