கோலாலம்பூர்:
இன்று சனிக்கிழமை (நவம்பர் 4) அதிகாலை சபாவின் கோத்தா பெலூடில் சுனாமி எச்சரிக்கை சைரன் கேட்டது ஒரு தவறான எச்சரிக்கை என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.
இமாம் ஹாஜி முஸ்தபா மஸ்ஜிட்டின் மைதானத்தில் நிறுவப்பட்டிருந்த தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை அமைப்பின் சைரன் இன்று அதிகாலை ஒலித்ததற்க்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம் என்றும், மாறாக எந்தவொரு சுனாமி எச்சரிக்கையையும் மலேசிய வானிலை மையம் வெளியிடவில்லை என்றும் அது தெரிவித்துள்ளது .
“இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட குழப்பம் மற்றும் சிரமங்களுக்கு மெட்மலேசியா மன்னிப்புக் கோருகிறது” என்று அது இன்று வெளியிட்டுள்ள ஒரு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.