வாஷிங்டன்:
அமெரிக்காவின் நாசாவை சேர்ந்த ஆய்வாளர்கள் இப்போது அட்டகாசமான கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளனர். இது பலருக்கும் வியப்பைத் தருவதாகவே இருக்கிறது. இந்த மிகப் பெரிய பிரபஞ்சத்தில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் இருக்கிறதா. இல்லை மற்ற கிரகங்களிலும் உயிரினங்கள் இருக்கிறதா என்பதே இங்கே பலருக்கும் எழும் கேள்வியாகும்.
இதற்கான விடையைக் கண்டறிய வானியலாளர்கள் தீவிரமாக முயன்று வருகிறார்கள் என்றே சொல்லலாம். இதற்கிடையே நாசா ஆய்வாளர்கள் முக்கியமான கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளனர். இது பிரபஞ்சத்தில் பூமியைத் தாண்டி மற்ற கிரகங்களிலும் உயிரினங்கள் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஆய்வாளர்கள் மத்தியில் எகிற வைத்துள்ளது.
நாசாவின் கெப்லர் விண்வெளி டெலஸ்கோப் ஏழு கிரகங் களைக் கொண்ட ஒரு சோலர் சிஸ்டத்தை கண்டுபிடித்துள்ளது. அந்த ஒவ்வொரு கிரகத்தில் இருந்தும் அதிகபட்ச வெப்பம் வெளியே வருகிறதாம். அதாவது நமது சூரியக் குடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தையும் காட்டிலும் அந்த கிரகங்களில் இருந்து வெளி வரும் வெப்பம் அதிகமாக இருக்கிறது என்பதையும் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்
இதற்கு ஆய்வாளர்கள் கெப்லர்-385 என்று பெயர் வைத்துள்ளனர். இந்த ஏலியன் சோலர் சிஸ்டத்தில் இருக்கும் அசாதாரண அமைப்பு தனித்துவமானது, அதாவது இதில் இருக்கும் ஏழு கிரகங்களும் அளவில் பூமியை விடப் பெரிதாக இருக்கிறது. அதேபோல நெப்டியூனை விட சிறியதாக இருக்கிறது. நமக்கு அருகில் இருக்கும் அனைத்து சோலஸ் சிஸ்டங்களில் இருந்தும் இந்த கெப்லர் 385 வேறுபட்டு இருக்க இதுவே காரணமாகும்..
பொதுவாக வெளியே கண்டுபிடிக்கப்படும் சோலர் சிஸ்டத்தில் அதிகளவில் கிரகங்கள் இருக்காது. ஆனால், ஆறுக்கும் மேற்பட்ட கிரகங்களைக் கொண்ட ஒரு சில சோலர் சிஸ்டங்களில் இந்த கெப்லர்-385 ஒன்றாகும். கெப்லர் டெலஸ்கோப் கண்டுபிடித்த முக்கிய சோலர் சிஸ்டங்களில் இது முக்கியமானதாக இருக்கிறது. இதுவரை கெப்லர் 385 டெலஸ்கோப் 4,400 கிரகங்கள், 700+ சோலர் அமைப்புகளைக் கண்டு பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கெப்லர்-385 சோலர் சிஸ்டத்தின் மையத்தில் சூரியனைப் போன்ற ஒரு நட் சத்திரம் இருக்கிறது. அந்த நட்சத்திரம் நமது சூரியனை விட சுமார் 10% பெரி யதாகவும் 5% வெப்பமானதாகவும் இருக்கிறது. அதில் இருக்கும் இரண்டு கிரகங்கள் பூமியை விடச் சற்றே பெரியதாக இருக்கிறது. பெரிய பாறைகளைக் கொண்ட அந்த கிரகங்களில் மெல்லிய வளிமண்டலங்கள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகி றார்கள்.
மற்ற ஐந்து கோள்களும் இதை விட பெரியதாக இருக்கிறது. அவை ஒவ்வொன்றும் பூமியை விடக் குறைந்தது இரண்டு மடங்கு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த கிரகங்கள் அடர்த்தியான வளிமண்டலத்தைக் கொண்டு இருக்கிறது. கெப்லர்-385 அமைப்பின் பண்புகளை இவ்வளவு துல்லியமாகக் கண்டுபிடித்துள்ளது, நாம் வானியல் துறையில் எந்தளவுக்கு முன்னேறி இருக்கிறோம் என்பதற்குச் சான்றாக இருக்கிறது.
இது பலருக்கும் வியப்பைத் தருவதாகவே இருக்கிறது. சூரியனைப் போலத் தொலை தூரத்தில் இருக்கும் ஒரு நட்சத்திரம், பல கோள்களைக் கொண்டிருந்தால் அதன் சுற்றுப்பாதைகள் வட்ட வடிவில் இருக்கிறது. அதேநேரம் அந்த நட்சத்திரத்தைச் சுற்றி ஒன்று அல்லது இரண்டு கோள்கள் மட்டுமே இருந்தால் அதன் பாதை பெரியளவில் வட் டமாக இருப்பதில்லை என்பதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய கெப்லர் 385 குறித்த ஆய்வு முடிவுகள் தி ஜர்னல் ஆஃப் பிளானட்டரி சயின்ஸ் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.




















