சீனாவில் உடற்பயிற்சிக்கூடம் இடிந்து விழுந்து மூவர் மரணம்

பெய்ஜிங்:

சீனாவின் வடகிழக்கு மாநிலமான ஹெய்லாங் ஜியாங்கில் உள்ள உடற்பயிற்சிக்கூடம் ஒன்று திங்கட்கிழமை இடிந்து விழுந்ததில், மூவர் உயிரிழந்ததாகவும் ஒருவர் காயமடைந்ததாகவும் அம்மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹுவானன் கவுண்டியில் உள்ள ஜியாமுசி நகரில் இருக்கும் யுசெங் உடற்பயிற்சிக்கூடம் இடிந்துவிழுந்தபோது அதனுள்ளே ஏழு பேர் இருந்தனர் என்றும், ஏனையோர் காயமின்றி உயிர்தப்பியதாகவும் அவர்கள் கூறினர்.

மேலும் மீட்புப் பணிகள் முடிவடைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரவு 7.20 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் உயிரிழந்த மூன்று பேரும் குழந்தைகளாக இருக்கலாம் என முதற்கட்ட அறிக்கை தெரிவிப்பதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here