கோலாலம்பூர் : ஒரு தங்க நகைக்கடையில் ஆயுதம் ஏந்தி, கொள்ளை செய்ததாக வாகனம் பழுதுபார்ப்பவர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று (அக். 8) குற்றம் சாட்டப்பட்டது. இதன் விளைவாக நகைக் கடைக்காரருக்கு 600,000 வெள்ளி இழப்பு ஏற்பட்டது.
அஹமட் எஃபி அஹமட் ஷசாகி (26) என்ற குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவருக்கு எதிரான குற்றச்சாட்டு , நீதிபதி மஹ்யான் தாலிப் முன் படிக்கப்பட்ட போது , அவர் தான் குற்றவாளி இல்லை என்றார்.
இந்த ஆண்டு மே 16 அன்று மாலை 4.43 மணியளவில் வங்சா மாஜூவில் உள்ள ஒரு நகைக் கடையில் கோடாரி, சுத்தியல் மற்றும் அரிவாள் ஆகிய ஆயுதங்களை ஏந்தி, கொள்ளை செய்ததாக அவர் மீதும் இன்னும் இரண்டு தனிநபர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 395 இன் கீழ் உருவாக்கப்பட்ட குற்றச்சாட்டு, அதே சட்டத்தின் பிரிவு 397 உடன் சேர்த்து, குற்றங்கள் என நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம், அல்லது பிரம்படி அல்லது இரண்டும் விதிக்க வழிசெய்கிறது .
அஹமட் எஃபிக்கு 20,000 வெள்ளி ஜாமீன் வழங்கப்பட்டதுடன், மேலும் அவரது இருப்பிடத்துக்கு அருகாமையிலுள்ள போலீஸ் நிலையத்தில் அவரது வரவை பதிவு செய்ய வேண்டும் என்றும் வழக்கின் சாட்சிகளை மிரட்ட கூடாது என்றும் உத்தரவிட்டார்.
மேலும் நீதிமன்றம் விசாரணைக்காக நவம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அரசு தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் அப்துல் காலிக் நாசெரி வழக்கு தொடர்ந்தார், குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
– பெர்னாமா




















