சினிமா பிரபலங்கள் கொண்டாடும் தல தீபாவளி!

சென்னை:

புதிதாக திருமணமான ஜோடிகள், இதுவரை எத்தனையோ தீபாவளியை கொண் டாடினாலும் திருமணத்திற்குப் பின்னர் தங்கள் துணையுடன் கொண்டாடும் முதல் தீபாவளியை மறக்கவே முடியாது. திருமணத்திற்கு முன்பு எத்தனையோ தீபாவளியை பெற்றோர்களுடனும், உறவினர்களுடன் கொண்டாடி இருப்பார்கள். ஆனால், துணை யோடு கொண்டாடும் இந்த தீபாவளி ரொம்ப ஸ்பேஷல். அப்படி சிறப்பான தல தீபாவளியை கொண்டாடும் திரைப்பிரபலங்கள் இதோ!

அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன்: தமிழ் சினிமாவில் வளர்ந்து நடிகரான அசோக் செல்வன் நடிகை கீர்த்தி பாண்டியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மிகவும் எளிமையாக இவர்களது திருமணம் எந்த ஒரு ஆரம்பரமும் இல்லாமல் நடந்தது.

கவின்-மோனிகா: விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் கவின் தற்போது, நல்ல கதைக்களம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.இவர் தனது நீண்ட நாள் தோழி மோனிக்காவை ஆகஸ்ட் 20ந் தேதி திருமணம் செய்து கொண்டார். உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

அமலா பாலு திருமணம்: நடிகை அமலா பாலு கேரள மாநிலம், கொச்சியில் நவம்பர் 5ந் தேதி கத் தேசாய் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். நடிகை அமலா பால் தமிழில், மைனா, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி, ஆடை உட்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான கடாவர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ஜோடியும் நாளை தலதீபாவளி கொண்டாட உள்ளனர்.

நாஞ்சில் விஜயன்: விஜய் டிவி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நாஞ்சில் விஜயன், கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு எது பல்வேறு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் கடந்த செப்டம்பர் மரியா என்ற பெண்ணை கரம் பிடித்தார். இந்த தம்பதிகளுக்கும் இந்த தீபாவளி தல தீபாவளி ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here