எதிர்க்கட்சி எம்.பி. சித்தி மஸ்தூரா முகமட்டுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார் லிம் குவான் எங்

கோலாலம்பூர்:

திர்க்கட்சி எம்.பி. சித்தி மஸ்தூரா முகமட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளார் DAP கட்சித் தலைவர் லிம் குவான் எங்.

DAP கட்சியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களுக்கும் சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவுக்கும் மலாயா கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் தலைவர் சின் பெங்கிற்கும் இடையே இருந்த உறவுகள் குறித்து டாக்டர் சித்தி கூறியிருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, லிம் சட்ட நடவடிக்கை எடுக்கிறார்.

திரெங்கானு மாநிலத்தில் கடந்த வாரம் நடந்த இடைத் தேர்தல் பேரணியில் பேசிய பாஸ் கட்சி எம்.பி.யான டாக்டர் சித்தி, மேற்கண்ட கருத்தைக் கூறியிருந்தார்.

அதாவது லிம்மின் தந்தையான ஜனநாயக செயல் கட்சி முன்னாள் தலைவர் லிம் கிட் சியாங், அமரர் லீயின் உறவினராவார் என்று மஸ்தூரா சொல்லியிருந்தார்.

மேலும் முன்னாள் நிதி அமைச்சரான லிம்மும் இதர DAP கட்சித் தலைவர்களான போக்குவரத்து அமைச்சர் ஆன்டனி லோக், உள்ளூர் அரசாங்க மேம்பாட்டு அமைச்சர் கா கோர் மிங், எம்.பி.க்கள் தெரேசா கோக், நே கூ ஹாம் ஆகியோரும் ஒருவரோடு ஒருவர் தொடர்புடையவர்கள் என்றும் டாக்டர் சித்தி கூறியிருந்தார்.

அவரது உரையைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் பரவலாகப் பகிரப்பட்டது.

இந்நிலையில், டாக்டர் சித்திக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தாம் வழக்கறிஞர் ஒருவரை நியமித்துள்ளதாக லிம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here