சுக்காய்:
கெமாமன் நாடாளுமன்ற இடைத்தேர்தலூக்கான வேட்புமனு தாக்கல் நாளை சனிக்கிழமை (நவம்பர் 18) தொடங்க உள்ளது.
தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தங்களின் வேட்புமனுக்களை சமர்ப்பிக்க காலை 9 மணி முதல் 10 மணி வரை டேவான் பெர்லியான் கெமாமான் நகராட்சி கவுன்சிலில் வந்து வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்தவுடன், கெமாமானின் நான்கு மாநிலத் தொகுதிகளான கெமாசிக், கிஜால், ஆயிர் பூத்தே மற்றும் குகாய் ஆகிய இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்ய தகுதியுள்ள வேட்பாளர்களுக்கு 14 நாட்கள் கிடைக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.




















