உலுசிலாங்கூர் நகராண்மைக்கழகத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டம் கட்டமாக இலக்கவியல் கார் நிறுத்தக் கட்டண முறை அமலுக்கு வர இருக்கிறது.
இதன் முதல் கட்டமாக புக்கிட் பெருந்தோங், புக்கிட் செந்தோசா பகுதிகளில் டிசம்பர் 1ஆம் தேதியில் தொடங்க்கப்படுவதாக உலுசிலாங்கூர் நகராண்மைக் கழகம் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக அடுத்தாண்டு ஜனவரி 2ஆம் தேதி முதல் பத்தாங்காலி, கோல குபு பாரு பகுதிகளில் இந்த கார் நிறுத்தக் கட்டண முறை தொடங்கும் எனவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் (எஸ்.எஸ்.பி) மற்றும் ஃப்ளாக்ஸி பார்க்கிங் ஆகிய இரு விவேக செயலியின் மூலமாக இந்த கட்டண முறை அமல்படுத்தப்படவிருப்பதாகவும் காலை 8 மணி தொடங்கி மாலை 6 மணி வரையிலும் கட்டணம் வசூலிக்கபடும் என்றும் பதிவில் விளக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக மேலும் விவரங்களை பெற விரும்புவர்கள் 1-700-819-612/ 03-60641331 இணைப்பு 135 என்ற தொடர்பு எண்ணுக்கு அழைக்கலாம்.