மேற்படிப்பை நிறுத்தாதீர்கள் என்கிறார் சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி

ஷா ஆலாம்:

டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்புகளை முடித்த பிறகும் அவை தொடர்பான மேற்படிப்பை தொடருமாறு பட்டதாரிகளை ஊக்குவிக்கிறார் சிலாங்கூர் ஆடசியாளரின் துணைவியார் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின்.

யுனிவர்சிட்டி டெக்னாலஜி மாரா (UiTM) துணை வேந்தராகவும் இருக்கும் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின், அறிவே உயர் நாகரீகத்தை உருவாக்குவதற்கான அடிப்படை என்றும், அறிவைத் தேடுவது ஒரு உன்னதமான செயல் என்றும் கூறினார்.

மேலும் “அறிவு பெறும் கலாச்சாரம் மேம்படுத்தப்பட வேண்டும், ஏனெனில் நாட்டின் ஏற்படும் சிக்கலான சவால்களை எதிர்கொள்ள அவற்றை தீர்ப்பவர்கள் மலேசியாவிற்கு தேவை” என்று இன்று டேவான் அகோங் துவாங்கு கேன்ஸலரில் நடந்த UiTM இன் 98 வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, உரையாற்றியபோது அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here