சிவபெருமானின் கதையை விளக்கும் வகையில் கைலாசநாதர் தலையில் மண்சட்டி சுமந்து வீதியுலா

காரைக்கால்புட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானின் கதையை விளக்கும் வகையில், ஆவணிமாத மூல நட்சத்திரமான செவ்வாய் கிழமை காரைக்கால் கைலாசநாதர் தலையில் மண் சட்டி சுமந்து வீதியுலா செல்லும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

புராணகாலத்தில் ஆற்றில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய, வீட்டுக்கு ஒரு ஆள் அனுப்ப வேண்டும் என்ற நிலையில், புட்டு செய்து பிழைப்பு நடத்திவந்த மூதாட்டி ஒருவரால், ஆள் அனுப்ப முடியாமல் தவித்தபோது, சிவபெருமான் அந்த மூதாட்டியிடம் சென்று உங்களுக்காக தான் மண் சுமப்பதாகவும், அதற்கு கூலியாக புட்டு வழங்குமாறு கோரினராம். பிறகு வேலை செய்யும் போது விளையாடி, பிரம்பு அடிப்பட்டு, பின்னர், ஒரு பிடி மண்ணை அள்ளிபோட்டபோது ஆற்றின் உடைப்பு சரியானதாக வரலாறு.

அந்த வராலாற்று நிகழ்வை சித்தரிக்கும் வகையில், காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் நேற்று நடைபெற்ற விழாவில், சுந்தரம்பாள் சமேத கைலாசநாதர் தலையில் மண்சட்டி சுமந்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்களுக்கு புட்டு மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here