பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 75 பேர் மட்டுமே நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

ஈப்போ:

கிந்தாவில் உள்ள டேவான் ஒராங் ராமாய் தாமான் மேரு 2A இல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எட்டு பேர் தங்கியிருந்த தற்காலிக நிவாரண மையம் நேற்று (நவம்பர் 19) இரவு 9.30 மணிக்கு மூடப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது கெரியான் மாவட்டத்தில் 22 குடும்பங்களைச் சேர்ந்த 75 பேர் அங்குள்ள இரண்டு நிவாரண மையங்கள் மட்டுமே இன்று காலை வரை திறந்திருப்பதாக பேராக் பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் தெரிவித்துள்ளது.

மாஞ்சுங், பேராக் தெங்கா, ஹிலிர் பேராக், பாகன் டத்தோக், முஅல்லிம், பாடாங் பாடாங் மற்றும் கிந்தா போன்ற பல மாவட்டங்களில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.

பாடாங் பாடாங்கில், சாலை இடிந்து விழுந்ததால், பிரதான சாலையில் பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதால், இலகுரக வாகனங்களுக்கு FT 1152 Felda Trolak Selatan வழித்தடத்தில் ஒரு பாதை மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.

“நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து மேலாண்மை திட்டத்தை (TMP) செயல்படுத்த அனைத்து வாகனங்களுக்கும் FT 001 ஜாலான் ஈப்போ-தஞ்சோங் மாலிம் பாதையில் ஒரே ஒரு பாதை மட்டுமே திறக்கப்பட்டுள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது.

“ஹிலிர் பேராக்கில், A129 ஜலான் லங்காப்-ஆயிர் ஈத்தாம் பாதையில் ஒரு தற்காலிக எச்சரிக்கைப் பலகை நிறுவப்பட்டுள்ளது, மேலும் சாலைப் பயனர்கள் FT058 பாதையில் உள்ள மாற்றுச் சாலையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அது மேலும் கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here