அலோர்ஸ்டார்:
வெள்ளத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 11 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர் தங்குவதற்காக, பாடாங் தெராப் மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஒரு தற்காலிக நிவாரண மையம் திறக்கப்பட்டது.
SK Tualakகில் உள்ள மையம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.01 மணிக்கு திறக்கப் பட்டது என்று கெடா சிவில் பாதுகாப்புப் படை (APM) பேரிடர் மேலாண்மை செயலகப் பிரிவுத் தலைவர் மேஜர் (PA) முஹம்மது சுஹைமி முகமது ஜைன் கூறினார்.
இரவு 7 மணி முதல் தொடர்ந்து பெய்த கனமழையால் கம்போங் லாபி, முகிம் துவாலக் கில் உள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
தற்போது வானிலை பிரகாசமாக உள்ளது மற்றும் மழை நின்று விட்டது. வெள்ள நீர் வடிந்துவிட்டது மற்றும் மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சிலர் தங்கள் வளாக த்தை சுத்தம் செய்வதற்காக வீடு திரும்பியுள்ளனர் என்றும் அவர் ஒரு அறிக்கையில் இன்று தெரிவித்தார்.



















