மூன்று சீன நிறுவனங்களின் பொருள்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை

நியூயார்க்:

மெரிக்கா, மேலும் மூன்று சீன நிறுவனங்கள் தயார் செய்யும் பொருள்களை அந்நாட்டிற்குள் இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது.

ஊழியர்களை அதிக நேரம் வேலை செய்ய அச்சுறுத்தியது, வீகர் இன மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை வேலையிடத்தில் துன்புறுத்தல் செய்தது போன்ற காரணங்களுக்காக அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக அமெரிக்கா தெரிவித்தது.

தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் பெரும்பாலும் இனிப்பு மூலம் உணவுகளை தயார் செய்பவை .

ஊழியர்களை துன்புறுத்தல் செய்ததாக அமெரிக்கா இதுவரை 30 சீன நிறுவனங்களின் பொருள்களுக்கு இறக்குமதி தடை செய்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சீன தூதரகத்தின் பேச்சாளர் லியு பெங்யூ கண்டித்துள்ளார்.

சீனாவின் வளர்ச்சியைத் தடுப்பதாகவும் சிஞ்சியாங் மாநிலத்தின் வளமும் நிலைத்தன்மையும் பாதிப்படையும் விதமாக இந்த நடவடிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சீனா இதை கடுமையாக எதிர்கிறது, சீன வர்த்தகத்தின் உரிமைகளைக் காக்கும் விதமாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

2022 ஜூன் மாதம் முதல் அமெரிக்க சுங்கத்துறை 2.68 பில்லியன் வெள்ளி மதிப்புள்ள 6,000க்கும் மேற்பட்ட கப்பல்களில் வந்த பொருள்களை ‘ஊழியர்களை துன்புறுத்தல் செய்வதை தடுக்கும்’ சட்டத்தின் கீழ் மறுஆய்வு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here