GLC நிறுவனத்தின் திட்ட விவகாரங்களில் பதவியை துஷ்பிரயோகம் செய்த வழக்கின் சந்தேக நபர்களுக்கு 4 நாட்கள் தடுப்புக்காவல்

கோலாலம்பூர், அக்டோபர் 26:

GLC நிறுவனத்தின் திட்ட விவகாரங்களில் பதவியை துஷ்பிரயோகம் செய்த வழக்கில், GLC நிறுவனத்தின் நிர்வாகி உட்பட மூன்று நபர்களுக்கு ஷா ஆலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று நான்கு நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பித்தது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) விண்ணப்பத்தை அனுமதித்த பின்னர், 40 முதல் 57 வயதுடைய பெண் உட்பட மூவருக்கும் அக்டோபர் 29 ஆம் தேதி வரை விசாரணைக்கு உதவும் வகையில் அவர்களை தடுப்புக்காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

GLC நிர்வாகியாக பணிபுரிந்த நபரைத் தவிர, தடுப்புக்காவல் செய்யப்பட்ட மற்ற இருவரும் திட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் தனியார் நிறுவன உரிமையாளர்கள் ஆவர்.

நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த ஆதாரங்களின்படி, GLC நிறுவனத்தின் நிர்வாகி தனது திட்டத் தலைவர் பதவியைப் பயன்படுத்தி, தனது சார்பாக திட்டத்தை நிர்வகிக்க தனியார் நிறுவனத்தில் திட்ட மேலாளராக தனது பிரதிநிதியை (proxy) பரிந்துரைத்து நியமித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது .

மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (MACC) சட்டம் 2009 பிரிவு 23ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

 

– பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here