சாதனை வீரர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் மணி ஜெகதீசன்

நமது நிருபர்: ராமேஸ்வரி ராஜா

  • ஆசியாவின் அதிவேக ஓட்டக்காரர் என்றும் பறக்கும் மருத்துவர் என்றும்
    விளையாட்டு ஆர்வலர்களால் அன்பாக அழைக்கப்படுபவர்
  • மெக்சிகோ ஒலிம்பிக் போட்டியின், 200 மீட்டர் அரை இறுதி தகுதிச்சுற்று ஓட்டத்தில், இவர் செய்த 20.92 விநாடிகள் சாதனை 49 ஆண்டுகளுக்குப் பிறகே முறியடிக்கப்பட்டது.
  • அனைத்துலகப் போட்டியில், ஒரே சமயத்தில் மூன்று தங்கங்களை வென்று சாதனை படைத்த ஒரே மலேசிய விளையாட்டு வீரர்

மலேசிய மண்ணுக்கு பன்முகத்துறையில் பெருமையைத் தேடித் தந்தவர். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்த முதல் ஓட்டப்பந்தய வீரர் எனும் பெருமைக்குரியவர். ஆசியாவின் அதிவேகமான ஓட்டக்காரர் என்றும் பறக்கும் மருத்துவர் என்றும் அனைத்துலக ரீதியில் அன்பாக அழைக்கப்படுபவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் மணிஜெகதீசன்.


மக்கள் ஓசை இயக்குநர் டத்தோ ச. கோபாலகிருஷ்ணன், மலேசிய விளையாட்டு மன்ற மன நல ஆலோசகரும் விளையாட்டுத்துறை வழி சமுதாய மேம்பாட்டு வரைதிட்ட நிபுணருமாகிய முனைவர் அண்ணாதுரை ஆகியோரும் டான்ஸ்ரீ மணிஜெகதீசனுடன் மக்கள் ஓசைக்காக கலந்துரையாடலுடன் கூடிய பேட்டியை நேரடியாக மேற்கொண்டனர்.

மெக்சிகோ ஒலிம்பிக் போட்டியின், 200 மீட்டர்அரை இறுதி தகுதிச்சுற்று ஓட்டத்தில் தாம் செய்த 20.92 விநாடிகள் சாதனை 49 ஆண்டுகளுக்குப் பிறகே முறியடிக்கப்பட்டது என தனது பகிர்வை சுவாரஸ்யமாகத் தொடங்கினார் மணிஜெகதீசன்.


1943ஆம் ஆண்டு பேராக் மாநிலம், கோலாகங்சார் நகரில் பிறந்தேன், எனது சாதனைகளின் வாயிலாக ‘ஆசியாவின் அதிவேகமான மனிதர்’ எனும் அடைமொழியும் பெற்றேன்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 1960, 1964, 1968ஆம் ஆண்டுகளில் மலேசியாவைப் பிரதிநிதித்தேன். அத்துடன் 1966ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மலேசியாவிற்கு மூன்று தங்கங்களை வென்று கொடுத்து சாதனை படைத்தேன் என தனது வெற்றிகள் குறித்து மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் அவர்.


1967ஆம் ஆண்டு சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் நோயியல் துறையில் பட்டம் பெற்று மருத்துவரானார் டான்ஸ்ரீ மணிஜெகதீசன். அது மட்டும் அல்லாமல், அந்த ஆண்டு பல்கலைக்கழகத்தின் சிறந்த மாணவராகவும் தேர்வு செய்யப்பட்டார். அதற்காகத் தங்கப் பதக்கமும் பெற்றார்.


1970ஆம் ஆண்டு பாங்காக்கில் உள்ள மகிடோல் பல்கலைக்கழகத்திலும், 1970ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகத்திலும் மருத்துவத் துறையில் உயர்க்கல்வியை மேற்கொண்டார். ஆங்கிலோ சீனப் பள்ளியில் பயிலும் போது, தன்னுடைய 16ஆவது வயதிலேயே 1960இல் ரோம் ஒலிம்பிக் போட்டிகளில் மலாயாவைப் பிரதிநிதித்தார்.
1960ஆம் ஆண்டு ரோம் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு அடுத்தடுத்து வந்த இரு ஒலிம்பிக் போட்டிகளிலும் இரு ஆசிய விளையாட்டுகளிலும் மலேசியாவைப் பிரதிநிதித்தார். அவர் செய்த சில சாதனைகள் இன்றும் முறியடிக்கப்படாமல் இருக்கின்றன.

இவர் முதல் முறையாக 1959இல் பேங்காக் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டார். 4து400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 1961இல் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில், மலேசியாவிற்கு மூன்று தங்கங்களையும் ஒரு வெள்ளியையும் கொண்டு வந்தார். அதன் பின்னர் அவருடைய பார்வை ஆசிய விளையாட்டுகளின் பக்கம் திரும்பியது.
1966ஆம் ஆண்டு ‘ஆசியாவின் சிறந்த விளையாட்டாளர்’ (அண்டிச்ண அணாடடூஞுணாஞு ணிஞூ 1966) எனும் விருதும் அவருக்குக் கிடைத்தது.

1968இல் மெக்சிகோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட பிறகு அதே ஆண்டு தம்முடைய 24ஆவது வயதில் விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, டாக்டர் மணி ஜெகதீசன், அனைத்துலக ரீதியில் ஒரு பிரபலமான மருத்துவராகவும், மருத்துவ ஆய்வாளராகவும் ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.


மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராகப் பதவி வகித்த முதல் மலேசிய இந்தியர், முதல் மலேசியத் தமிழர் எனும் பெருமையையும் கொண்டிருக்கிறார். 86 நாடுகளுக்கு விளையாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார் இவர்.

நாம் ஏற்கெனவே வரலாற்றுப் பதிவு மூலமாக விவரங்கள் பல அறிந்து வைத்திருந்தாலும் முனைவர் அண்ணாதுரையும் டத்தோ கோபாலகிருஷ்ணனும் விடுத்த கேள்விகளுக்கு அதே உற்சாகத்துடனும் துடிப்புடனும் பதிலளித்தார் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் மணி ஜெகதீசன்.

விளையாட்டாளராக

1960 – ரோம் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
1961 – ரங்கூன் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள், 200மீ, 400மீ, 4து400மீ தங்கப் பதக்கம் 100மீ வெள்ளிப் பதக்கம்
1962 – ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஜாகர்த்தா, 200மீ தங்கப் பதக்கம் – மலேசியாவிற்குக் கிடைத்த முதல் தங்கம்
1964 – தோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுகள், 200மீ அரையிறுதிச் சுற்று
1965 – கோலாலம்பூர் தென்கிழக்காசிய விளையாட்டுகள் 100மீ, 200மீ, 4து100மீ, 4து400மீ தங்கப் பதக்கம்
1966 – ஆசிய விளையாட்டுப் போட்டிகள், பாங்காக், 100மீ, 200மீ, 4து100மீ தங்கப் பதக்கம், (அண்டிச்ண அணாடடூஞுணாஞு ணிஞூ 1966)
1968 – மெக்சிகோ ஒலிம்பிக் விளையாட்டுக்கள், 200மீ அரையிறுதிச் சுற்று
2002 – ஆசிய பிரபலங்களின் நினைவு வரிசையில் நிரந்தரமாக இணைக்கப்பட்டார் (அண்டிச்ண ஏச்டூடூ ணிஞூ ஊச்ட்ஞு)


விளையாட்டு அதிகாரியாக

1972 – மலேசிய ஒலிம்பிக் குழுவின் மருத்துவ அதிகாரி
2003 – பொதுநலவாய விளையாட்டுகளின் அறவாரிய மருத்துவ ஆலோசகர், மெல்பர்ன் பொதுநலவாய விளையாட்டுகளின் மருத்துவ ஆலோசகர், மலேசிய ஒலிம்பிக் மன்றத்தின் துணைத்தலைவர்
2004 – ஏதன்ஸ் ஒலிம்பிக் போட்டியில் மலேசியக் குழுவின் தலைவர், ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய மலேசியர்.
2007 – மலேசிய ஒலிம்பிக் மருத்துவ மன்றத்தின் தலைவர்


ஆற்றிய சேவைகள்

தலைவர், நோயியல் துறை, கோலாலம்பூர் பொது மருத்துவமனை (1985-88)
தலைவர், மலேசிய மருத்துவஆய்வுக்கழகம் (1988-93)
இணைவேந்தர், மலேசிய புத்ரா பல்கலைக்கழகம்
துணை இயக்குநர், தொழில்நுட்ப ஆய்வியல் துறை, மலேசிய சுகாதார அமைச்சு (1993-98)
மருத்துவ ஆலோசகர், ஐக்கிய நாட்டு சபை மேம்பாட்டுத் திட்ட வாரியம், ஜெனிவா
ஆயுட்கால உறுப்பினர், மலேசிய அறிவியல் கலாமன்றம் (மருத்துவம்)
செயற்குழு உறுப்பினர், மலேசிய ஐசனோவர் சக ஆய்வாளர்க் கழகம்
மனித நல ஆய்வுக்கழகம், ஐக்கிய நாட்டு சபை மேம்பாட்டுத் திட்ட வாரியம் சுவிட்சர்லாந்து
விரிவுரையாளர், மலேசிய புத்ரா பல்கலைக்கழகம்
ஆலோசகர், உலக வங்கி
ஆலோசகர், உலக சுகாதார நிறுவனம்
அறிவுரைஞர், நுண்ணுயிரியல், சன்வே மருத்துவமனை
அறிவுரைஞர், நுண்ணுயிரியல், மாஹ்சா பல்கலைக்கழகக் கல்லூரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here