அதிபர் தேர்தலில் போட்டியிட டொனால்டு டிரம்ப் தகுதியற்றவர்: அமெரிக்க நீதிமன்றம்

மெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட டொனால்டு டிரம்ப் தகுதியற்றவர் என அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ள சம்பவம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்கா குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு, டொனால்டு டிரம்ப் அதிபராக பதவி வகித்தார். மீண்டும் 2020-ல் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் டிரம்பை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

கடந்த 2021-ம் ஆண்டு டிரம்ப் ஆதரவாளர்கள்  நாடாளுமன்றத்தின் முன் கூடினர். அவரகளை  போலீசார் தடுத்து நிறுத்திய போது, அது  வன்முறையாக மாறியது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் அமெரிக்கா  நாடாளுமன்ற கட்டிடம் முற்றுகையிட்ட வழக்கை விசாரித்த கொலராடோ மாகாண நீதிமன்றம் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட டிரம்ப் தகுதியற்றவர் என உத்தரவிட்டுள்ளது.

மேலும் குடியரசு கட்சி வேட்பாளர்களுக்கான முதன்மை தேர்தலுக்கான ஒட்டுச்சீட்டில் டிரம்ப் பெயர் இடம் பெறக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா அரசியல் வரலாற்றில் இதுபோன்ற நடவடிக்கையை எதிர்கொள்ளும் முதல் அதிபர் வேட்பாளர் என்ற பெயர் டொனால்டு டிரம்ப்க்கு கிடைத்துள்ளது. இதனால் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரும் 2024-ம் மார்ச்சில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான முதன்மை தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here