கோம்பாக்:
செலாயாங்கில் இன்று சனிக்கிழமை (டிச. 23) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் வெளிநாட்டினர் என நம்பப்படும் 3 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தாமான் செலாயாங் ஜெயா பகுதியில் நடந்ததாக நம்பப்படுகிறது.
இதுதொடர்பில் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் கம்யூன் டத்தோ ஹுசைன் உமர் கான், இன்று கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


























