கெடாவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் ஆடவர் பலி

ஜித்ரா:

போலீசாருடன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தேடப்படும் குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் ஆயுதம் ஏந்திய ஆடவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நேற்று மாலை 5.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், “ஓப் லாராஸ்” என்ற குறியீட்டுப் பெயரின் கீழ் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கெடா குற்றப் புலனாய்வுத் துறையின் பிரிவு D9 இன் குழு, அந்த நபர் காரில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்டதைக் கண்டதாக கெடா காவல்துறைத் தலைவர் டத்தோ பிசோல் சாலே தெரிவித்தார்.

சந்தேக நபர் முதலில் நிறுத்த மறுத்ததாகவும், ஆனால் அவர் போலீசாரை நோக்கி இரண்டு தடவை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அவர் கூறினார். அதனைத்தொடர்ந்து, போலீசார் பின்னர் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 57 வயதான சந்தேக நபர் கொல்லப்படடார் என்று கூறினார்.

“சந்தேக நபரின் காரை ஆய்வு செய்ததில், இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் கணிசமான அளவு வெடிமருந்துகள், அவற்றில் குறிப்பாக 100 ரவுண்டுகள் 9-மில்லிமீட்டர் (mm) தோட்டாக்கள், 100 ரவுண்டுகள் .38 மி.மீ. M-16 போன்ற துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட 5.56 தோட்டாக்களையும் நாங்கள் கண்டுபிடித்தோம்,”என்று அவர் மேலும் கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 307 மற்றும் துப்பாக்கிச் சட்டம் 1960 இன் பிரிவு 8 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாக ஃபிசோல் கூறினார்.

மேலும் சந்தேக நபர் ஏதேனும் குற்றச் செயல்களுடன் தொடர்புள்ளாரா என்பது குறித்து போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வார்கள் என அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here