ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய குற்றச்சாட்டில் நால்வர் கைது

குவாந்தான்:

கிழக்கு கடற்கரை விரைவுச் சாலையின் (LPT1) அகமட் ஷா பாலத்தில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் மூன்று உயர்கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களையும் ஒரு பள்ளிச் சிறுவனையும் போலீசார் நேற்று (டிசம்பர் 27) கைது செய்தனர்.

நேற்று சமூக ஊடகங்களில் வைரலாக காணொளியில் அடிப்படையில், குறித்த மோட்டார் சைக்கிள்களைக் கண்காணித்து, 15 மற்றும் 22 வயதுடைய 4 சந்தேக நபர்களை தெமெர்லோ மற்றும் மாரானிலுள்ள உள்ள அவர்களது வீடுகளில் வைத்து போலீசார் கைது செய்தனர் என்று தெமெர்லோ மாவட்ட காவல்துறைத் தலைவர் ACP மஸ்லான் ஹாசன் கூறினார்.

1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 42(1) இன் கீழ் பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக அனைத்து ஆண் சந்தேக நபர்களும் தெமெர்லோ போக்குவரத்து காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும், இந்த வழக்கில் தொடர்புடையதாக நம்பப்படும் மற்றொரு சந்தேக நபரை போலீசார் இன்னும் கண்காணித்து வருவதாக மஸ்லான் கூறினார்.

சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 09-271 6222 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.

முன்னதாக, LPT1 இல் விபத்தை ஏற்படுத்திய ‘சூப்பர்மேன்’ ஸ்டண்ட் செய்யும் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் குழு சாகசத்தை நிகழ்த்துவதைக் காட்டும் 28 வினாடி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here